பதில்
ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்களுடைய ஃபத்வாவில் முந்தைய வேதங்களில் கருத்துக்களைப் பற்றி கூறும் பொழுது இன்ஞில் என்பது சுர்யானியா மொழியில் ஈஷா(அலைஹி) அவர்களுக்கு அருளப்பட்டதாகும், தவ்ராஃத் மூஸா (அலைஹி) அவர்களுக்கு அல் ஹிப்னியா என்று சொல்லக்கூடிய ஹிப்ரு மொழியில் அருளப்பட்டதாகும், தாவூத் (அலைஹி) அவர்களுக்கு இறக்கப்பட்ட ஸபூர் வேதம் எந்த மொழியில் இறக்கப்பட்டது என்று கருத்து வேறுபாடு இருக்கிறது.
ஒவ்வொரு நபியும் அந்த மொழி பேசக் கூடியவர்களுக்காக இறக்கப்பட்டிருந்தனர். ஸபூர் வேதம் பனு இஸ்ரவேலர்களுக்கு அனுப்பப்பட்ட தாவூத் (அலைஹி)அவர்களுக்கு இறக்கப்பட்டது , அந்த அடிப்படையில் பனூ இஸ்ரவேலர்கள் சுர்யானியா மற்றும் ஹிப்ரு என்ற இரண்டு மொழிகளையும் பேசுபவர்களாக இருந்தார்கள் ,அதனால் இந்த இரண்டில் ஒன்றாக இரக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இப்ராஹிம்(அலைஹி) அவர்கள் ஹிப்ரு மற்றும் சுர்யானியா பேசக்கூடிய இரண்டு மக்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்தார்கள் அதனால் அவர்கள் இரண்டு மொழியையும் பேசக் கூடியவர்களாக இருந்தார்கள்.
மூஸா (அலைஹி) அவர்களுக்கு தவ்ராஃத் அல்லாமல் அதற்கு முன்பு 10க்கு மேற்பட்ட ஸுஹ்ஃபுகள் (ஏடுகள்) வழங்கப்பட்டதற்கு ஆதாரம் மிக பலவீனமான ஹதீஸாக (இப்னு ஹிப்பானில்) உள்ளது. ஸுஹ்ஃபுகள் வேறு தவ்ராஃத் வேறு என்பதனை அறிஞர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள். அல்லாஹ் தவ்ராஃத் வேதமாக அருளப்பட்டது ஸுஹ்ஃபுகளூம் வழங்கப்பட்டது என்று அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் அல்லாஹ் கூறுகிறான்.
மேலும் அறிஞர்களின் கூற்றுப்படி முன்வந்த வேதங்களில் அம்மக்களுக்கென நல்லுபதேசமும் படிப்பினை பெறக்கூடிய சம்பவங்களும் சில சட்டங்களும் இருந்தது என்று கருத்து இருக்கிறது. தவ்ராஃத்தை பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் எல்லா காரியத்திற்கும் தீர்வும் தெளிவும் வழங்கப்பட்டதென்று.
அந்தந்த காலத்திற்கு இறக்கப்பட்ட ஏடுகள் வேதங்கள் அம்மக்களுக்கு தேவையான ஷஅரியத் சட்டத்தை அல்லாஹ் வழங்கி இருப்பான் பின்னர் அது முடிந்து இறுதி வேதமாக அல்-குர்ஆன் இறக்கப்பட்டது.
- உஸ்தாத் சதாம் ஹுஸைன் ஹஸனி
Youtube - Ahlul Islam : கேள்வி 87, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.