About Us

எங்களை பற்றி

இஸ்லாமிய அறிவை தமிழில் தெளிவாகவும் எளிமையாகவும் சரியாகவும் அளிப்பதே எங்கள் நோக்கம்.

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

Our Mission

எங்கள் நோக்கம்

குர்ஆன், ஹதீஸ் மற்றும் அவற்றின் பொருள்தொகுப்புகள் — ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறைப்படி தெளிவாக அளிப்பதும், புரிந்துகொள்வதும், செயல்படுத்துவதும் — அதுவே சீரிய பாதை.

Ahlul Islam இணையதளம் தமிழ் முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய கல்வியை எளிமையாகவும் தெளிவாகவும் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. குர்ஆன் விளக்கம், ஹதீஸ் ஆய்வுகள், இஸ்லாமிய சட்டங்கள், அகீதா (கொள்கை), வரலாறு, மற்ற மதங்கள் பற்றிய ஆய்வுகள் என பல பிரிவுகளில் தகவல்களை வழங்குகிறோம்.

சத்திய இஸ்லாத்தின் செய்திகளை பிறர்க்கு எத்தி வைப்பது ஒரு முஸ்லிம் ஆற்ற வேண்டிய கடமைகளில் ஓன்று. நவயுகத்தில் அக்கடமையை நிறைவேற்றுவதற்கு இணையம் ஒரு சிறந்த சாதனமாக பயன்படுகிறது.

நமது “அஹ்லுல் இஸ்லாம்” இணையதளம் முஸ்லிம்களுக்கு தங்களின் மார்க்கத்தை சரியாக பின்பற்றுவதற்கு வழிகாட்டுவதையும், பிற மதத்தவருக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதையும் குறிக்கோளாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நல்ல நோக்கம் நிறைவேற அனைத்து சகோதரர்களும் ஒத்துழைப்பு வழங்குமாறும், அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறும் கேட்டு கொள்கிறோம். அல்லாஹ் போதுமானவன்.

M. அப்துர் ரஹ்மான் மன்பஈ

Our Values

எங்கள் கொள்கைகள்

01

தெளிவு

குர்ஆனையும் ஹதீஸையும் தமிழில் எளிமையாக விளக்குகிறோம்.

02

நம்பகத்தன்மை

ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறையை அடிப்படையாக கொள்கிறோம்.

03

செயல்திறன்

அறிந்ததை வாழ்வில் செயல்படுத்த வழிகாட்டுகிறோம்.

7+பிரிவுகள்
160+கட்டுரைகள்
100%தமிழ் மொழியில்