பதில்
பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமை மற்றும் இன்னபிற கடமையை செய்யாமல் இதுபோன்ற விளையாட்டுகளில் மூழ்கி இருப்பது தவறாகும்.
இதனால் அல்லாஹ்விற்கு செய்யக்கூடிய கடமையான தொழுகையை தொழுவ திலும், இன்னும் கடமையான விஷயங்களை செய்வதிலும் பொடுபோக்கு ஏற்படுகிறது.
தற்சமயம் சிறியவர் முதல் பெரியவர் வரை இது போன்ற விளையாட்டுகளில் மூழ்கி இருப்பது உற்சாகத்தை இழந்து உடல் உழைப்புக்கு மாறாக அமைந்து விடுகிறது.
சுடுவது(Shooting Game) போன்ற விளையாட்டாக இருப்பினும் அதனையே பின் தொடர்ந்து வருவதால் மனதிலும் இவ்வாறு செய்ய வேண்டுமென்று தோன்றல் உண்டாகும்.
அதனின் விளைவாக சமூகத்திலும் இதுபோன்ற வன்முறை நடந்தால் மக்கள் பாதிப்புக்கு ஆளானால் கூட இவர்களின் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது சாதாரணமாக கடந்து செல்லக்கூடிய மனோநிலை உண்டாகின்றது.
இது மனோ ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது இதனடிப்படையில் பார்க்கும் போது வன்முறை கொடுமை, ஆபாசம கொடுமை போன்றவைகள் அடங்கியிருப்பதால் இதனை விளையாடுவதை தவிர்ப்பது நம்மீது கடமையாகும்.
இப்போது இருக்கக்கூடிய ஆன்லைன் விளையாட்டுக்களில் சிலை வணக்கம் போன்ற ஷிர்கான காரியம் இருக்கிறது ஆரம்பத்தில் இதனை விளையாட்டாக எடுத்துக் கொண்டால்கூட மனரீதியாக ஏற்படும் மாற்றத்தினால் அல்லாஹ்வுக்கு இணை வைக்கக் கூடியவர்களாக ஆகிவிடுகிறோம் உள்ளம் ஐயம் கொள்ளாமல்.
- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil
Youtube - Ahlul Islam : கேள்வி 99, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.