பதில்
இப்படி இவர் கேட்பதற்கு காரணம் என்னவென்றால் சமீபகாலமாக தமிழ்நாட்டை ஆட்சி புரியும் எடப்பாடியும் அவருடைய ஆட்சியையும் கண்டித்து போராட்டம் நடத்துகின்ற பெரும்பாலான சகோதரர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தனிப்பட்ட முறையில் கண்டிக்கும் விதமாக இத்தகைய வார்த்தைகளை பயன் படுத்துகிறார்கள்.
இதற்கு அர்த்தம் என்ன வென்றால் எடப்பாடி ஒரு செத்த பிணம் என்று பொருளாகிறது,
இத்தகைய வார்த்தைகளை பயன்படுத்தலாமா? இல்லை வேண்டாமா என்று கேட்டால்? பயன்படுத்தக்கூடாது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால் அவர் நமக்கும் முதலமைச்சர் ஆவார்.
நாம் வேண்டிக் கொள்கின்ற குறைகளை நிறைவேற்றாமல் இருப்பதற்காகவும் மற்றும் தாமதம் படுத்துவதற்காகவும் அவரை இத்தகைய வார்தைகளால் இழிவு படுத்துவது தவிர்க்க வேண்டிய ஒன்று, ஏனென்றால் ஒரு சமயம் நம் கோரிக்கைகளை ஏற்காமல் தள்ளிப் போடுகிறவர்கள் பின்வரும் காலத்தில் அதே கோரிக்கைகளை செயல்படுத்த முன்வரலாம்.
இத்தகைய சூழ்நிலை ஏற்படாத வகையில் நாம் உபயோகிக்கும் வார்த்தைகள் அப்பதவியில் இருப்பவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி கூடுதலாக அவர்களுடைய தவறான நிலைப்பாட்டில் உறுதியாக பிடிவாதம் பிடிப்பதற்கு நம்முடைய வார்த்தை மற்றும் செயல்பாடுகள் காரணமாக அமைய வாய்ப்பிருக்கிறது,
எனவே இத்தகைய வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது.
சிலர் கேட்கலாம் குர்ஆனில் அல்லாஹ் 4வது ஸூராவில் 148வது ஆயத்தில் "அநியாயம் செய்யப்பட்டவரிடமிருந்தே தவிர மற்றவர் தீய வார்த்தைகளை பகிரங்கமாக சொல்வதை அல்லாஹ் விரும்புவதில்லை" என்று அல்லாஹ் இவ்வசனத்தில் சொல்கிறானே இதற்கு என்ன அர்த்தம்?
பொதுவாக தீய வார்த்தைகளை பகிரங்கமாக பயன்படுத்தக்கூடாது ஆனால் அநியாயம் செய்யப்பட்டு இருப்பவர் சொல்லலாம் என்கின்ற கருத்து இந்த வசனத்தில் இருக்கிறது.
இந்த ஆயத்தில் அல்லாஹ் சொல்வது என்னவென்றால் உதாரணமாக ஒருவர் மற்றவருக்கு அநியாயம் செய்துவிட்டார் அதற்கு எதிர்வினையாக எதுவும் செய்ய முடியவில்லை என்றால் மாறாக பாதிக்கப்பட்டவர் அநியாயம் செய்தவரை மட்டமான தரம் தாழ்ந்த அல்லது சபிக்கிற வார்த்தைகளை பயன்படுத்துவது குற்றம் இல்லை என்பது தான் இவ்வசனத்தில் சொல்லப்படுகிறது. இக்கருத்து எடப்பாடிபழனிசாமி அவர்களுக்கு பொருந்தாது ஏனென்றால், அவர்தான் நாம் வைக்கக்கூடிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் பொறுப்பில் இருக்கிறார் இருப்பினும் அவர் செய்யவில்லை என்றால் நாம் தொடர்ச்சியாக அவர்களிடம் வலியுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
இந்நிலையில் நாம் அவரை வெறுப்பேற்றும் வகையில் மட்டமான வார்த்தைகளை பயன்படுத்தினால் நமக்கே அது பாதகமாக அமையும் அதுமட்டுமில்லாமல் குர்ஆனிலும் ஹதீஸிலும் என்ன சொல்கிறது என்றால் பொதுவாக நமக்குப் பிடிக்காதவர்கள், மார்க்கத்திற்கு எதிராக நடக்கக் கூடியவர்களாக இருந்தாலும் அவர்களிடம் நல்ல வார்த்தைகளை பயன்படுத்துங்கள் என்று அல்லாஹ் வலியுறுத்துகிறான் இதுபற்றி 17 ஸூராவில் 53 வது வசனத்தில் கூறுகிறான் “நபியே நீங்கள் என் அடியார்கள் இடத்தில் சொல்லுங்கள் அவர்கள் எது மிக அழகானதோ அந்தச் சொல்லையே சொல்லட்டும் நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கு மத்தியில் சீர்குலைவு ஏற்படுத்தி விடுவான்"-அதாவது அழகான நல்ல வார்த்தைகளை தான் பேச வேண்டும் இதை தவிர்த்து பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளை பயன்படுத்தினால் அங்கு ஷைத்தான் சீர்குலைவை ஏற்படுத்தி விடுவான் என்று வசனத்தில் அல்லாஹ் எச்சரிக்கையாக சொல்கின்றான்.
இதைப்போன்று நபியவர்களின் ஹதீஸில் பார்த்தோமென்றால் பல ஹதீஸ்களில் இந்த மாதிரியான நடைமுறைகள் கூடாது என்று சொல்கிறான் "யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பி இருக்கிறார்களோ அவர்கள் நல்லதையே பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும்".
இம்மாதிரியான வழிகாட்டுதல் அது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் செயல்களுக்கு முரணாக இருக்கின்றது மற்றும் அதனை தவிர்க்க வேண்டும்.
குர்ஆனில் அல்லாஹ் சொல்கின்றான் மாற்று மதத்தில் இருப்பவர்கள், இஸ்லாமை ஏற்காதவர்கள் மற்றும் அவர்கள் பெரிய பொறுப்பில் இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் நாம் போராடும்போது வார்த்தைகள் மென்மையாக அமைய வேண்டும் இதற்கு உதாரணமாக குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான் முஸா(அலை) ஃபிர்அவ்னை சந்திக்கும் பொழுது அவரிடம் மென்மையாக பேசும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே கொடிய ஃபிர்அவ்னுகே அத்தகைய மதிப்பு என்றால் நமது காலத்தில் இருக்கின்ற அதுவும் முஸ்லிமல்லாத பிற மதத்தை சார்ந்தவர் உயர்ந்த பதவியில் வகிக்கும் பொழுது நாம் இந்த மாதிரி பேசுவது ஒரு சரியான முறையல்ல.
எதிரிகளைக் கூட கண்டனம் செய்ய, நாம் அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் காட்டிய வழிமுறைகளையே பின்பற்ற வேண்டும்.
- ஷேய்க் அப்துர் ரஹ்மான் மன்பஈ.M.phil
Youtube - Ahlul Islam : கேள்வி 06, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.