பதில்

இப்னு உமர்(ரழி) அவர்கள் மக்காவில் ளுஹர் தொழுகையை தொழுதுவிட்டு சில மக்கள் தொழுவதை பார்த்து இவர்கள் என்ன தொழுகிறார்கள் என்று கேட்கப்பட்ட பொழுது அதற்கு அவர்கள் உபரியான(நஃபீல்/சுன்னத்) தொழுகை என பதில் கூறினார்கள்.

அதற்கு இப்னு உமர் நான் நபி(ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்கர், உமர், உஸ்மான் (ரழியல்லாஹுஅன்ஹும்)) அவர்களுடன் பிரயாணத்தில் இருந்திருக்கிறேன் ஃபர்ளான தொழுகையை தவிர்த்து முன் பின் ஸுன்னத் தொழுகையைத் தொழுவதில்லை என்று கூறினார்கள் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்படி பிரயாணத்தின்போது ஸுன்னத்தான தொழுகையை விட வேண்டும் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

சில மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி இதில் விதிவிலக்காக பிரயாணத்தின் போது ஃபஜர் முன் ஸுன்னத், வித்ரு மற்றும் ளுஹா தொழுகையை நபி(ஸல்) அவர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று ஹதீஸ்களின் வாயிலாக அறிய முடிகிறது இவற்றை அல்லாது மற்ற ஃபர்ளான தொழுகைகளின் முன் பின் சுன்னத்துகள் விட்டு விடுவதே சிறந்தது என்பதையும் காண முடிகிறது.

- உஸ்தாத் சதாம் ஹுஸைன் ஹஸனி

Youtube - Ahlul Islam : கேள்வி 88, ஆடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.